Islamic Widget

November 03, 2011

காய்கறி விலை திடீர் உயர்வு-ஏழை,நடுத்தர மக்கள் பாதிப்பு!



தொடர்மழை காரணமாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால, நெல்லையில் உள்ள நடுத்தர மற்றும் ஏழைமக்கள் பாதிக்கப் படுகின்றனர்.
கடந்த வாரம் சீரான விலையில் விற்ற காய்கறிகள் மூன்று நாட்களுக்கு முன் திடீரென உயர்ந்தது.கடந்த 31ம்தேதி ரூ.32-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி நேற்று ரூ.40 ஆக விலை அதிகரித்துள்ளது. கத்தரி ரூ.20 லிருந்து ரூ.24, பீன்ஸ் & அவரை ரூ.30 லிருந்து ரூ.35 ஆகவும், புடலை & சீனி அவரை ரூ.10 லிருந்து ரூ.15, வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.32, உள்ளூர் பல்லாரி ரூ.10 லிருந்து ரூ.15, மல்லி ரூ.25 லிருந்து ரூ.30 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.


மேலும் கடந்த சில தினங்களுக்கு முன் ரூ.20 லிருந்து ரூ.13 ஆக குறைந்த ஒரு கிலோ மிளகாய் நேற்று திடீரென ரூ.30 ஆக விலை உயர்ந்துள்ளது. மாங்காய் ரூ.50, வெண்டை ரூ.20 என அதே விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் மகசூல் சேதமடைந்துள்ளது. இதனால் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment