பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 1.82 உயர்ந்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலின் விலையினை எண்ணெய் நிறுவனங்கள் நிலைமைக்கு ஏற்றவாறு தாங்களே உயர்த்திக் கொள்ளலாம் என மத்திய காங்கிரஸ் அரசு முழு அதிகாரத்தையும் தனியார் எண்ணெய் நிறுவங்களின் கைகளில் கொடுத்த பிறகு, பெட்ரோலின் விலை அடிக்கடி உயர்ந்து வருகிறது.
ஒருமுறை டாலர் மதிப்பு உயர்வு காரணமாக விலை ஏற்றினால் அடுத்த முறை கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணம் என ஒவ்வொரு நேரம் விலையேற்றத்தின்போதும் ஒரு காரணத்தைக் கூறிக்கொள்கின்றனர்.
இவ்வாறு கடந்த இரு மாதங்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த முறை விலை உயர்வுக்கு, டாலர் மதிப்பு உயர்வு காரணமாக கூறப்பட்டது.
தற்போது மீண்டும் பெட்ரோல் விலையினை லிட்டருக்கு ரூ 1.82 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை, கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் ரூபாயின் மதிப்பு இறக்கம் போன்ற காரணங்களால் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த விலையேற்றம் அடுத்த இரண்டு வராங்களுக்குள் அமலுக்கு வரும் எனவும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment