Islamic Widget

November 16, 2011

பெட்ரோல் விலை அதிரடியாக குறைந்தது!

புதுடெல்லி : சர்வ தேச விலையுயர்வுக்கு ஏற்ப பெட்ரோல் விலையை அதிகரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் விலை வீழ்ச்சியின் காரணமாக பெட்ரோல் விலையை குறைத்துள்ளது.

இது கடந்த 3 ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.85 மற்றும் வரி உட்பட சென்னையில் ரூ.2.35 குறைந்துள்ளது. இது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்திருக்கின்றன. அமெரிக்க டாலருக்கு இணையாக ரூபாய் மதிப்பு சரிவால், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரித்ததாக கூறி, நவம்பர் மாதம் 3ம் தேதி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தின.
இந்த விலை உயர்வுக்கு எதிர்க் கட்சிகள் மட்டுமின்றி ஐ.மு.கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மத்திய அமைச்சரவையில் இருந்து விலகப் போவதாக மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி எச்சரித்தார். எனினும், விலை உயர்வை வாபஸ் பெற இயலாது என்று பிரதமர் கைவிரித்தார். இதையடுத்து, இனி பெட்ரோல் விலையை உயர்த்தினால் அரசில் இருந்து விலகுவோம் என்று மம்தா கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு பேரல் 121.67 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 115.85 டாலராக குறைந்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை குறைக்க இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தகவல் வெளியானது. எனினும், எண்ணெய் நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைவதால் அது சாத்தியமாகாது என்றும் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று முன்தினம் கூறினார். அதே கருத்தை பிரதமர் மன்மோகன் சிங்கும் தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு ஸி2 வரை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக நேற்று முன்தினம் இரவு முதல் தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. இதுபற்றி டெல்லியில் நேற்று காலை பெட்ரோலிய அமைச்சக உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சர்வதேச சந்தை நிலவரப்படி பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கின்றன. இப்போது கச்சா எண்ணெய் விலை சிறிது சரிந்துள்ள நிலையில் அதன் பலனை நுகர்வோருக்கு அளிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருக்கலாம்’ என்றார்.


அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.85 குறைக்கப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் நேற்று மாலை அறிவித்தன. அதன்படி, விலையுடன் வரியும் குறைவதால் சில்லரை விற்பனையில் விலை அதிகபட்சமாக ரூ.2.35 வரை குறையும் என்று தெரிவித்தன. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.2.35 குறைந்து ரூ.72.73ல் இருந்து ரூ.70.38 ஆகியுள்ளது

No comments:

Post a Comment