Islamic Widget

November 04, 2011

ஓமனில் கடும் மழை - தாய், குழந்தை 6 பேர் பலி! பலி எண்ணிக்கை கூடும் என அச்சம்!



அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில்  இரு நாட்களாக ஆங்காங்கே கடும் மழை பெய்து வருகிறது.


கடுமையான மழை காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இது வரை தாய் மற்றும் குழந்தை உட்பட ஆறு பேர் பலியாகியுள்ளதாகவும் மேலும் சிலர் பலியாகி இருக்கக் கூடும் என்று நமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் ஹம்ரியாவில் உள்ள  அல் நதா மருத்துவமனை வளாகத்தில் புகுந்ததால் காவல்துறை முடுக்கி விடப் பட்டு அல் நதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்த நோயாளிகள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ராயல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர்.

ருஷ்டாக்கில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் காரில் கடக்க முயன்ற தாயும் அவரது குழந்தையும் அடித்துச் செல்லப் பட்டு பலியாகியுள்ளனர். வாடி கபீர் என்னும் இடத்தில் குழந்தைகள் சென்ற பள்ளி வேன் நீரில் அடித்துச் செல்லப் பட்டு உரிய நேரத்தில் ராணுவத்தால் எடுக்கப் பட்ட நடவடிக்கையால் மீட்கப்  பட்டது.

இரண்டு மணி நேரம் அடித்த தொடர் மழையால் வாகனப் போக்குவரத்து முடங்கி இயல்பு நிலை பாதிக்கப் பட்டது. ரூவி நகரில் உள்ள பல கடைகளில் மழை நீர் சூழ்ந்து கொண்டதால் ஹோட்டல் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் மூடப் பட்டன. ஹம்ரியா போன்ற தாழ்வான பகுதிகளில் நிறுத்தப் பட்டு இருந்த பல கார்கள் மழை நீரில் அடித்துச் செல்லப் பட்டன.

No comments:

Post a Comment