திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுக்களை சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி தள்ளுபடி செய்தார்.
2G அலைக் கற்றை ஒதுக்கீடு ஊழலில் சி.பி.ஐ யால் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டு இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி, சரத்குமார் உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து இருந்தனர். கனிமொழி,சரத் குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொராணி ஆகிய ஐந்து போரையும் ஜாமீனில் விட தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என சி.பி.ஐ தெரிவித்து இருந்தது.
இன்று தீர்ப்பை ஒத்தி வைத்து இருந்த நிலையில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒ.பி.சைனி, கனிமொழி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளார்.
இன்று எப்படியும் ஜாமீன் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் கனிமொழியை வரவேற்க திமுக எம்.பி க்கள், திமுக பொருளாளர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழியின் கணவர் அரவிந்தன், தாயார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் டெல்லி சென்று இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அளித்த சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழி உள்ளிட்ட ௭ பேரின் ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்தது திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மகளின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப் பட்ட தகவல் திமுக தலைவர் கருணாநிதிக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கனிமொழி உள்ளிட்ட 7 பேரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது ஏன் என்பது நீதிமன்றம் தமது உத்தரவில், "கனிமொழி சமுதாயத்தின் உயர்ந்த மதிப்பில் இருப்பவர் மட்டுமல்லாமல் அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருக்கிறார். கனிமொழி ஒரு பெண் என்பதற்காக அவருக்குக் கருணை காட்ட முடியாது. குற்றவாளிகள் பொது மக்களின் வரிப் பணத்தைத் தங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். மேலும் நாட்டின் பொருளாதார அழிவுக்கு ஒரு காரணமாக அமைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
"இது போன்ற மாபெரும் தவறு இழைத்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது" என்று நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்
"இது போன்ற மாபெரும் தவறு இழைத்தவர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது" என்று நீதிபதி தமது உத்தரவில் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment