Islamic Widget

February 25, 2011

பெட்ரொல் விலை மீண்டும் உயர்வு?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வைத் தொடர்ந்து பெட்ரோலின் விலை பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பின் மீண்டும் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துனீசியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட வளைகுடா மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சியைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்று 110 டாலராக உயர்ந்துள்ளது.இதனைத் தொடர்ந்து இந்தியாவில் பெட்ரோலின் விலை உயர்த்தப்படுமா என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்து அவர் கூறியதாவது:
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஊசலாட்டத்தில் இருக்கிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் விவகாரத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலா அமைச்சர் குழுவிடம் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.பிரணாப் முகர்ஜி தற்போது பட்ஜெட் தயாரிப்பில் தீவிராமாக உள்ளார். எனவே, பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின், பிரணாப் முகர்ஜி நேரம் ஒதுக்கும்போது, அமைச்சர்கள் குழு கூடி முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Source:inneram

No comments:

Post a Comment