Islamic Widget

February 24, 2011

நாடு திரும்புகிறார் சவூதி மன்னர்: உற்சாக வரவேற்பு

நலம் பெற்று இன்று நாடு திரும்பும் சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதுக்கு சவூதி அரேபியா முழுதும் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
மன்னர் அப்துல்லா தனது தண்டுவடச் சிகிச்சைக்காக நியுயார்க் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும் பொருட்டு கடந்த நவம்பர் 22-ல் அமேரிக்கா சென்றிருந்தார். அங்கு ஒரு மாத சிகிச்சை எடுத்துக்கொண்டு உடல்நலம் தேறி டிசம்பர் 21-ம் தேதி மருத்துவமனையிலிருந்து புறப்பட்ட அவர் ஓய்வுக்காக மொராக்கோ சென்றிருந்தார். அதுவரை அரசப் பொறுப்புகளை மன்னரின் சகோதரரும் பட்டத்து இளவரசருமான இளவரசர் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் கவனித்து வந்தார்.
மருத்துவமனை வாசமும் அதன்பின் இரண்டு மாத ஓய்வும் எடுத்துத் திரும்பும் மன்னருக்குச் சவூதி நாடு முழுவதும் மிக உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக, எதிர்வரும் 26-ம்தேதி சனியன்று சவூதி அரசாங்க அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அஃதன்றி, இன்றிலிருந்து சனிக்கிழமை வரை குறுஞ்செய்திகள், படச்செய்திகள், அனுப்ப ஏதும் கட்டணம் வசூலிக்கப்படாது என்று சவூதி தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று படக்காட்சி அழைப்புக்கும் இலவசம் என்று சவூதி தொலைத்தொடர்பு நிறுவனம் அறிவித்துள்ளது.வடக்கு ஆஃப்ரிக்கா, மற்றும் வளைகுடா நாடுகள் சிலவற்றில் காணப்படும் கலகங்களுக்கும் போராட்டங்களுக்கும் மாறாக சவூதி அரேபியாவில் மன்னரின் நாடு திரும்பலை முன்னிட்டு நலமான சுமூகமான உற்சாகமான மனநிலை காணப்படுகிறது.

Source:inneram

No comments:

Post a Comment