நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விவரம்: பரங்கிப்பேட்டையில் 185, புவனகிரி 102, சிதம்பரம் 93, கொத்தவாச்சேரி 87, அண்ணாமலை நகர் 86.80, கடலூர் 84, சேத்தியாத்தோப்பு 76, வானமாதேவி 68.30, பெலாந்துறை 64, காட்டுமன்னார்கோவில் 62, லக்கூர் 48, லால்பேட்டை 44, பண்ருட்டி 40, விருத்தாசலம் 38.20, மேமாத்தூர் 38, குப்பநத்தம் 33.20, கீழ்ச்செருவாய் 30, ஸ்ரீமுஷ்ணம் 30, தொழுதூர் 20, காட்டுமயிலூர் 20, வேப்பூர் 16 மி.மீ., மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் வடிகால் பகுதியான பரங்கிப்பேட்டை, புவனகிரி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், சேத்தியாத்தோப்பு பகுதிகளில் கடந்த 26ம் தேதி பெய்த மழை நீர் முற்றிலுமாக வடியாத நிலையில், நேற்று முன்தினம் ஒரே இரவில் பெய்த கன மழை காரணமாக மேற்கண்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது.
இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில் நேற்றும் தொடர்ந்து கனமழை கொட்டியதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளில் முடங்கினர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் நகர சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளம் சூழும் கிராமங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீட்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
Source:dinamalar
December 02, 2010
பரங்கிப்பேட்டையில் 185 மி.மீ., மழை பெய்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- 6 அடி நீளத்தில் சாரை பாம்பு பிடிப்பட்டது
- உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- டூவீலர் இருந்தால் 4 சிலிண்டர் தான்; பார்லி நிலைக்குழு பகீர் பரிந்துரை
- வீராணம் ஏரி உபரி நீரை வெளியேற்ற பாழ்வாய்க்காலில் ரூ.6 கோடியில் மதகு
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- 1.கடலூர் பாரதி சாலையில் மீண்டும் "மெகா' பள்ளம்
- நரேந்திர மோடிக்கு எதிராக சாட்சியம் அளித்த காவல்துறை அதிகாரி கைது!
No comments:
Post a Comment