பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து இடங்களில் வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது. சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க இருப்பதால் வாக்காளர் சேர்க்கும் பணி மாவட்ட முழுவதும் பல கட்டங்களாக நடத்தப் பட்டது. புதிய வாக்காளரை சேர்க்க ரேஷன் அட்டை, வயதுக்கான சான்றிதழ் உள்ளிட்ட பல விதிமுறைகள்
இருந்ததால் பெரும்பாலானோரின் மனு நிராகரிக் கப்பட்டது. இந்நிலையில் நேற்று பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கும்மத்பள்ளி அரசு நடுநிலைப்பள்ளி, சலங்காரத்தெரு தொடக்கப் பள்ளி, தேசிய தொடக்கப்பள்ளி, நெடுஞ்சாலைப்பள்ளி ஆகிய ஐந்து இடங்களில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு சிறப்பு முகாம் நடந்தது.
முகாமில் ரேஷன் அட் டைக்கு பதில் வி.ஏ.ஓ., சான்றிதழ், வயது சான்றிதழுக்கு தந்தை அல்லது தாய் ஒப்புதல் கடிதம் கொடுத் தால் போதும் என விதிமுறைகள் தளர்த்தப் பட்டதால் நேற்று ஏராளமானோர் புதிய வாக்கா ளர்களாக சேர்க்கப் பட்டனர். நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் செழியன், வி.ஏ.ஓ., ராஜாராமன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.
நடுவீரப்பட்டு: பண் ருட்டி அடுத்த சி.என். பாளையம் கடைவீதியில் உள்ள நடுநிலைப்பள்ளி மையத்தில் போதிய விண் ணப்பங்கள் இல்லாததால் பொதுமக்கள் தங்கள் சொந்த செலவில் ஜெராக்ஸ் எடுத்து வந்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பித்தனர்.
Source:dinamalar
November 15, 2010
பரங்கிப்பேட்டையில் வாக்காளர் சேர்ப்பு முகாம்
Subscribe to:
Post Comments (Atom)
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- ஹதீஸில் பிரார்த்தனைகள்
- ஹஜ் பெருநாள் மதீனா
No comments:
Post a Comment