Islamic Widget

November 15, 2010

ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவையைத் தொடங்குகிறது!

முன்னணி சமூக இணையதளமான ஃபேஸ்புக் கூகிள் மற்றும் யாஹூ நிறுவனங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தன்னுடைய உபயோகிப்பாளர்களுக்கு இலவச மின்னஞ்சல் சேவையை வழங்க உள்ளது.


சான்பிரான்சிஸ்கோவில் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக டெக்கிரன்ச் என்ற நுட்பவியல் வலைத்தளம் கூறியுள்ளது.

ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் சுமார் 500 மில்லியன் பேர் உள்ளனர் என்றும் மின்னஞ்சல் முகவரி @facebook.com என்று முடிவடையும் எனவும் அந்தத் தளம் கூறியுள்ளது.

மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் மென்மொருள்களில் ஃபேஸ்புக் செயல்படும் வகையில் மைக்ரோசாஃப்டுடன் ஃபேஸ்புக் இணைந்து செயல்படுவதற்கான அறிவிப்பும் திங்கள் கிழமையன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மின்னஞ்சல் சேவை வழங்குவது உறுதியானால், மின்னஞ்சல் சேவை வழங்கும் முன்னணி தளமாக ஃபேஸ்புக் விளங்கும். விண்டோஸ் லைவ் ஹாட்மெயில் உபயோகிப்பாளர்கள் 361 மில்லியனும் யாஹூ மின்னஞ்சல் உபயோகிப்பாளர்கள் 273 மில்லியனும் ஜிமெயில் உபயோகிப்பளார்கள் 193 மில்லியனும் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உபயோகிப்பாளர்கள் 500 மில்லியன் என்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.


Source:inneram

No comments:

Post a Comment