உரிப்பவரைக் கண்ணீர் விடவைக்கும் வெங்காயம் இனி அதன் விலையைக் கேட்பவருக்கும் கண்ணில் நீர் சுரக்கவைக்கும் விதமாக மளமளவென்று விலையேறி வருகிறது.
இந்தியாவில் கர்நாடக மாநிலத்திலும், மராட்டியத்தின் நாசிக் பகுதியிலும் தான் வெங்காயம் அதிகம் விளைகிறது.
பெங்களூர், பகல்கோட், பிஜப்பூர், தால்வாட், கடாக், சித்ரதுர்கா, தேவாங்கர், கடாக் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் கர்நாடகாவில் மட்டும் இந்த ஆண்டு 17 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு இருந்தது. ஆனால், அண்மையில் கர்நாடகாவில் பெய்துவரும் மழை காரணமாக
வெங்காயம் விலை ஏறிக்கொண்டே போகிறது. கடந்த மாதம் வரை கிலோ ரூ.பதினைந்து என்று விற்ற வெங்காயம் தற்போது ரூ.30 ஆகி, பின் ரூ. 40 என்று விற்றுவருகிறது.இன்னும் விலை அதிகரித்து ரூ.60 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கர்நாடகா காய்கறி வியாபாரிகள் கூறுகின்றனர்.
அண்மை மழையால் வெங்காயப் பயிர்களில் தண்ணீர் தேங்கி பெருமளவு பயிர்கள் நாசமாகிவிட்டன. விளைந்து இருந்த வெங்காயமும் தண்ணீரில் மூழ்கி அழுகிவிட்டது. கிட்டத்தட்ட 60 சதவீத பயிர்கள் நாசமாகிவிட்ட காரணத்தால் வெங்காயம் விலை கிலோவுக்கு ரூ.60 வரை உயரலாம் என பெங்களூர் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
பெங்களூர் மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் டன் வெங்காயம் விற்பனைக்கு வரும் தற்போது இது 2500 டன்னாக குறைந்துவிட்டது. பிஜப்பூரில் இருந்து தினமும் 3 ஆயிரம் டன் விற்பனைக்கு வரும். தற்போது 1000 டன்னாக குறைந்துவிட்டது.
மராட்டிய மாநிலம் நாசிக் பகுதியிலும் அதிக அளவில் வெங்காயம் விளைகிறது. ஆனால், அங்கு உற்பத்தியாகும் வெங்காயம் ஜனவரி மாதம்தான் சந்தைக்கு வரும். எனவே ஜனவரி 15-ந்தேதிக்கு பிறகு வெங்காயம் விலை குறையலாம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.
Source:inneram
November 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- பற்றியெறிந்த வத்தக்கரை சில video காட்சி
- பொலிவியா நிலச்சரிவில் 400 வீடுகள் புதைந்தன; 44 மரணம்!
- வசதி இல்லாத முதியோருக்கு இலவச ஹஜ் பயண வசதி
- கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை; பரங்கிப்பேட்டையில் 12 மில்லி மீட்டர் மழை பெய்தது
- மல்லிகைப் பூ ஒரு முழம் 50 ரூபாய்!
- உலகின் மிகக் குறைந்த விலை டேப்லட் பிசி இந்தியாவில் அறிமுகம்
- முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!
- ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தலைமை அதிகாரி பணி நீக்கம்!
- ஹதீஸில் பிரார்த்தனைகள்
- ஹஜ் பெருநாள் மதீனா
No comments:
Post a Comment