சிதம்பரம்: சென்னை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் குளிர் சாதன வகுப்பு பெட்டியில் உள்ள சக்கரம் ஒன்று இறுகி தீப்பற்றும் நிலை ஏற்பட்டதை எஞ்சின் ஓட்டுனர் கவனித்ததால் சென்னை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் மிகப்பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
சென்னையில் இருந்து மதுரைக்கு சிதம்பரம் வழியாக செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாரந்தோறும் சென்னை-மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் அதிகாலையில் செல்கிறது. இந்த ரெயில் நேற்றுமுன்தினம் சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், கடலூர் வழியாக ஆலப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரெயிலில் ஏதோ உராய்வது போன்று உணர்ந்த ரெயில் எஞ்சின் ஓட்டுனர் ரெயிலின் வேகத்தை குறைத்து பரங்கிப்பேட்டை, கிள்ளை வழியாக அதிகாலை 2.50 மணிக்கு சிதம்பரம் வந்தார்.
பின்னர் ரெயிலை நிறுத்தி பார்த்த போது குளிர் சாதனப் பெட்டியில் உள்ள சக்கரம் இறுகி ஓட முடியாமல் இருந்தது. இதனால் பிரேக் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இன்னும் கொஞ்சம் தொலைவில் ரெயில் சென்றிருந்தால் சக்கரம் பாதையில் உரசி ரயிலில் தீப்பற்றி பெரிய விபத்து ஏற்பட்டு இருக்கும் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிக்கப்பட்டது. இதனால் அந்த ரெயில் சிதம்பரத்தில் இருந்து 3 1/2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது
Source: inneram.com
No comments:
Post a Comment