Islamic Widget

November 01, 2010

பரங்கிப்பேட்டையில் 30 மில்லி மீட்டர் மழை

கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 115 மில்லி மீட்டர், பரங்கிப்பேட்டையில் 30 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.
தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழையினால்தான் தமிழ்நாட்டுக்கு பெரிதும் பலன் கிடைக்கும். வடகிழக்கு பருவமழை ஆண்டுதோறும் அக்டோபர் 20-ந் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்போ அல்லது பின்போ வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும். ஆனால் நேற்று வரையில் வடகிழக்கு பருவமழை பெய்ய வில்லை.

பருவமழை பெய்ய தாமதம் ஆனாலும் வெப்பசலனம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. கடலூரில் நேற்று முன்தினம் இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், கடலூர்-சிதம்பரம் சாலை, நெல்லிக்குப்பம் உள்ளிட்ட சாலைகளின் ஓரங்களில் மழைநீர் குளம்போல தேங்கின. அதேபோல கடலூர் முதுநகர் பனங்காட்டு காலனி, செல்லங்குப்பம் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சுற்றிலும் மழை நீர் குளம்போல தேங்கி நிற்பதை காண முடிந்தது.
மேலும் பாதாளசாக்கடை பணிகள் முடிவடைந்து சாலைகள் சீரமைக்கப்படாத கடலூர்-கூத்தப்பாக்கம் சாலை, புதுப்பாளையம் சாலை, வில்வநகர் செல்லும் சாலை, போன்ற சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடலூரில் நேற்று காலையில் வழக்கம்போல வெயில் அடிக்க தொடங்கியது. பின்னர் மாலை 4.30 மணியளவில் லேசான மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து இரவு வரை விட்டு விட்டு பெய்தது.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விருத்தாசலத்தில் 115.20 மில்லி மீட்டர் மழையும், குறைந்த பட்சமாக லக்கூரில் 25 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. சராசரியாக 47.61 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் பிற பகுதிகளில் பெய்துள்ள மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

தொழுதூர் - 98பெலாந்துறை - 72குப்பநத்தம் - 70.40பண்ருட்டி - 56.20லால்பேட்டை - 56மேமாத்தூர் - 50கீழ்செருவாய் - 49சேத்தியாத்தோப்பு - 48காட்டுமன்னார்கோவில் - 46அண்ணாமலைநகர் - 44.20வானமாதேவி - 43.20சிதம்பரம் - 41புவனகிரி - 36கொத்தவாச்சேரி - 32பரங்கிப்பேட்டை - 30வேப்பூர் - 26ஸ்ரீமுஷ்ணம் - 25கடலூர் - 24.70காட்டுமயிலூர் - 22

Source: Daily Thanthi

No comments:

Post a Comment