Islamic Widget

November 26, 2010

பரங்கிப்பேட்டை ரயில் பாதை பணி: பொறியாளர் ஆய்வு

கடலூர் :கிள்ளை - பரங்கிப்பேட்டை ரயில் பாதையின் அருகே நடந்து வரும் வெள்ளப்பணிகளை நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர்  ஆய்வு செய்தார். கிள்ளை, பரங்கிப்பேட்டை இடையே ரயில் பாதையின் அருகில் வெள்ளாற்றின் வலது கரையில் அரிப்பு ஏற்பட்டது.

 இதனால் வெள்ளத்திலிருந்து ரயில் பாதையை பாதுகாக்க தமிழக அரசு 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பனை மரங்களைக் கொண்டு தற்காலிக பாதுகாப்பு பணி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது பணிகள் நடந்து வருகிறது. நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் அன்பழகன் ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.  ஆய்வின்போது  கண்காணிப்பு பொறியாளர் நஞ்சன் , செயற்பொறியாளர் செல்வராஜ், வேங்கடபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


Source:dinamalar

No comments:

Post a Comment