இந்தியாவின் மிகப்பெரும் பெட்ரோலியம் சில்லறை விற்பனையாளரான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோலின் விலையை லிட்டர் ஒன்றுக்கு 33 பைசாக்கள் உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்நத விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த முறை விலையேற்றத்துக்குப் பின் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்திருப்பதால், சில்லறை விற்பனை விலையை உயர்த்த வேண்டியது அவசியம் என்று இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் பி.எம்.பன்சால் கூறியுள்ளார்.
கடந்த முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போது, சர்வதேச சந்தையில் பேரல் ஒன்று 81 முதல் 82 அமெரிக்க டாலர் வரை இருந்தது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 87 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளதால், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஐஓசி நிறுவனத்திற்கு 1 ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அந்நிறுவனத் தகவல்கள் கூறுகின்றன.
Source: inneram
No comments:
Post a Comment