கிள்ளை:பிச்சாவரத்தில் படகு சவாரி மூலம், தீபாவளியை முன்னிட்டு இந்த ஆண்டு கூடுதலாக 40 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.கிள்ளை அடுத்த பிச்சாவரத்தில் சுற்றுலாத் துறை மூலம் படகு சவாரிக்கு அனுமதிக்கப்பட்டு துடுப்பு படகுகளுடன், மோட்டார் படகுகள்
இயக்கப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக கோடை மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்வதால் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. தற்போது தீவாளியை முன்னிட்டு தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறையாக இருந்ததால், நேற்று முன்தினம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்தனர். இதனால், கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் படகு சவாரி மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் வருவாயாகும். நேற்று "ஜல்' புயல் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டது.
Source: Dinamalar
November 09, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- என்ன செய்தார் எம்.எல்.ஏ. செல்வி ராமஜெயம் ?
- மகனை வைத்து பின்லேடனைப் பிடிக்க புஷ் போட்ட திட்டம்!
- சவூதி: "சினிமா தேவை" என்கிறார் உயர் அதிகாரி
- இடைமறித்து எதிரி ஏவுகணைகளை தாக்கும் இந்தி ஏவுகணைச் சோதனை வெற்றி
- முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் படத்தை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்த மாணவன் கைது
- விஷ வண்டுகளை அழிக்க பரங்கிப்பேட்டை தீயணைப்பு படையினர் தயக்கம்
- மோடியின் உண்ணாவிரதத்தில் போலீசார் தடியடி!
- உதவி தொகை வழங்கும் விழா
- விருத்தாசலம்-உளுந்தூர்பேட்டை சாலையில் ரூ. 21 கோடி செலவில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி மும்முரம்
- எல்லா ஹிந்துக்களும் தீவிரவாதிகள் அல்ல – திக்விஜய் சிங்

No comments:
Post a Comment