இந்திய சுற்றுப் பயணத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தோனேசியாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முதலடியை எடுத்து வைத்துள்ளதாகவும் , இதில் நீண்ட தொலைவு பயணிக்க உள்ளதாகவும் சொன்னார் . "இந்தோனேசியா என்வாழ்வில் ஓர் அங்கம் என்றார் ஒபாமா
கடந்த புதன்கிழமையன்று இந்தோனேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய ஒபாமா இந்தோனேசியா என் வாழ்வின் அங்கம் என்று கூறினார் தனது சிறு வயதில் அங்கு கழித்த நாள்களை நினைவு கூர்ந்தார். தன் தாய் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்து கொண்டது குறித்தும், அதன் பின்னர் தான் இந்தோனேசியாவில் சில ஆண்டுகள் வசித்தது குறித்தும் ஒபாமா தன் பேச்சில் குறிப்பிட்டார். அதிபராக பதவியேற்ற பின்னர் ஒபாமா தன் சொந்த வாழ்க்கை குறித்து பொது மேடையில் வெளிப்படையாக அதிகம் பேசியது இப்போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியா முஸ்லிம் நாடுகள், மேற்கத்திய நாடுகள் ஆகிய இரண்டுக்குமே முன்னுதாரனமாகத் திகழ்வதாக அவர் புகழாரம் சூட்டினார். மேலும் அவர் பேசுகையில் "நீண்ட நாள்களாக சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்த இந்தோனேசியா இப்போது ஜனநாயக பாதைக்கு வந்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு இந்தோனேசியா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. இங்குள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவை இந்நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும் சகிப்புத் தண்மைக்கும் எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.
என் இந்தோனேசிய வாழ்க்கையின்போது நான் பலவற்றை இங்கு கற்றுக் கொண்டேன். இங்கு படித்தபோது நானும் என், பள்ளி நண்பர்களும் ஒரு நாள் நான் அமெரிக்க அதிபராக உயர்வேன் என துளியும் எதிர்பார்க்கவில்லை. நெல்லின் மீது ஓடி விளையாடியது, பட்டம் விட்டது, பட்டாம் பூச்சி பிடித்தது போன்ற நினைவுகள் எனக்கு இப்போது வருகின்றன. இந்தோனேசியாவில் இருந்து ஒழுங்கற்ற இளைஞனாக சென்ற நான். இப்போது அமெரிக்க அதிபராக இங்கு வந்துள்ளேன்' என்றார் ஒபாமா.
முன்னதாக மத்திய ஜகார்தாவிற்குச் சென்ற ஒபாமாவும் அவரது மனைவி மிச்சேலும் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதிக்குச் சென்றனர். அவரை வரவேற்ற இமாம் ஹாஜி முஸ்தபா அலி யாக்கூப், அந்த மசூதியின் வரலாறு, கட்டடக் கலை ஆகியவை குறித்து ஒபாமாவுக்கு எடுத்துரைத்தார். இந்த மசூதி ஒரு கிறிஸ்தவரால் வடிவமைக்கப்பட்டது என்ற தகவலையும் ஒபாமாவிடம் கூறினார் இமாம்.
அதிபர் ஒபாமாவின் ம்னைவி மிச்சேல் முழுவதுமாக உடல் மறைக்கப்பட்ட பேண்ட் மற்றும் மேல் ஆடை அணிந்து வந்திருந்தார் தலையையும் அவர் போர்த்தி வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: inneram
No comments:
Post a Comment