பரங்கிப்பேட்டை : பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க சாலையின் நடுவில் 'சென்டர் மீடியா' அமைக்க வேண்டும்.
பு.முட்லூரில் இருந்து சிதம்பரத்திற்கு வெள்ளாற்று பாலம் வழியாக புறவழிச்சாலை செல்கிறது. இவ்வழியாக இதுவரை போக்குவரத்து துவங்கப்படாத நிலையில் பஸ்கள், கனரக வாகனங்கள் என தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.
பு.முட்லூரில் புறவழிச்சாலை துவங்கும் இடத்தில் சாலையை பிரிக்கும் வகையில் 'சென்டர் மீடியா' அமைக்காததால் கடலூர், புவனகிரி மற்றும் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. கடந்த நான்கு மாதங்களில் பு.முட்லூர் புறவழிச்சாலை பிரியும் இடத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகளில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் பு.முட்லூர் புறவழிச் சாலை சாலை துவங்கும் இடத்தில் ரவுண்டானாவுடன் கூடிய 'சென்டர் மீடியா' அமைக்க வேண்டும்.
Source: Dinamalar
October 21, 2010
பு.முட்லூர் புறவழிச்சாலையில் அடிக்கடி விபத்து; 'சென்டர் மீடியா' அமைக்கப்படுமா?
Labels:
பரங்கிப்பேட்டை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment