பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலத்தில் மின் விளக்கு வசதி செய்து தரவேண்டும் என கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு: பரங்கிப்பேட்டை - கிள்ளை இடையே வெள்ளாற்றில் 23 கோடி ரூபாய் செலவில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. பரங்கிப்பேட்டை மற் றும் கிள்ளையைச் சுற்றியுள்ள பொதுமக் கள், மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த பாலம் மூலம் பயனடைந்து வருகின்றனர்
கடலில் பிடிக்கப்படும் மீன் வகைகள் கனரக வாகனங்கள் மூலம் வெளி மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல இந்த பாலம் பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும் கார், வேன், பைக் என அனைத்து வாகனங்களும் அடிக்கடி சென்று வருவதால் இந்த பகுதி பிசியாகவே உள்ளது.
இந்நிலையில் புதியதாக பாலம் திறக் கப்பட்டதில் இருந்து சுற்றுப் பகுதியைச் சேர்ந்த குடிபிரியர்கள் மாலை நேரத்தில் பாலத்தில் உட்கார்ந்து குடிக்கின்றனர். இதனால் பாலம் வழியாக செல்பவர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. எனவே பரங்கிப்பேட்டை சாலை மற் றும் கிள்ளை சாலை வரை மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் மக்கள் நிம்மதியாக அந்த வழியாக அச்சமின்றி செல் வார்கள். சமூக விரோதிகள் புழக்கத் திற்கு வாய்ப்பு இருக்காது. அதனால் பாலத்தில் மின்விளக்கு வசதி செய்துதரவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
No comments:
Post a Comment