சிதம்பரம் : கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா நாளை சிதம்பரம் வருகை தர உள்ளதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்லைக்கழகத்தில் 78வது பட்டமளிப்பு விழா நாளை (6ம் தேதி) நடக்கிறது. தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான சுர்ஜித்சிங் பர்னாலா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பட்டம் மற்றும் அறக்கட்டளை விருதுகளை வழங்குகிறார். கவர்னர், ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் வருவதையொட்டி நேற்று ஹெலிகாப்டர் ஒத்திகை நடந்தது.
சென்னையில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர், சிதம்பரம் விவசாய கல்லூரி ஹெலிபேடில் தரையிறங்கியது. ஹெலிகாப்டரில் வந்த கவர்னரின் பாதுகாப்பு அதிகாரிகள் பல்கலைக்கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின், ஹெலிபேடில் இருந்து பட்டமளிப்பு விழா அரங்கிற்கு கவர்னர் செல்லும் வழியை கார் மூலம் சென்று ஆய்வு செய்தனர்.
Source: Dinamalar
No comments:
Post a Comment