கிள்ளை : சிதம்பரம் அருகே நவாப் பேட்டை வெள் ளாற்று வடிகாலில் மண் அரிப்பை தடுக்கும் வகையில் பொதுப்பணித்துறை மூலம் 92 லட் சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப் பணை அமைக்கும் பணி துவங்கியது. நவாப்பேட்டை அருகில் உப்பனாற்றுப் பகுதியில் மண் அரிப்பு ஏற் பட்டு ரயில் சாலை வரை பாதிப்பு ஏற்படும் நிலையில் இருந்தது.
ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு இப்பகுதியில் தடுப் பணைக் கட்டா விட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தற் காலிக தடுப்பு அமைக்க திட்ட மதிப் பீடு அனுப்புமாறு அறிவுறுத் தப்பட்டது. இது குறித்து கலெக் டர் சீத் தாராமன், டி.ஆர்.ஓ., நடராஜன் உள் ளிட்ட அதிகாரிகள் நேரில் செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.
அதனைத் தொடர்ந்து 92 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக தடுப்பணைக் கட்ட திட்டமிட்டனர். தற்போது 40 அடி ஆழம் உள்ள வெள்ளாற்றில் 600 மீட்டர் தொலைவில் பனைமரத்தை நட்டு மண் மூட்டை கொண்டு தற்காலிக தடுப்பணை அமைக் கும் பணி துவங்கியுள்ளது. இதற்காக சுற்றுப்பகுதியில் இருந்து 6 ஆயிரம் பனைமரம் வாங்கி கிள்ளை ரயில் நிலையத் தில் அடுக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி மழைகாலத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Source: Dinamalar
October 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- Saudi Government is set to effectively SUSPEND all sponsorship transfer for all nationalities 07 Jan 2012
- இந்தியாவின் முக்கிய துறைகளில் சங்க்பரிவார்கள் ஊடுருவல்: திக்விஜய்சிங்
- ஜெத்தா தமிழ் சங்கத்தின் வாழ்க நலமுடன் நிகழ்ச்சி!
- நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?
- அமெரிக்காவில் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்திய முஸ்லீம் கவுன்சில்.
- கிருஷ்ணகிரி:குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் பலி: மேலும் குண்டுகள் பறிமுதல்
- இறப்புச்செய்தி
- பரங்கிப்பேட்டை பழைய ரயில்வே கருடரை அகற்றாததால் புதிய பாலத்திற்கு ஆபத்து
- நஷ்டவாளர்கள் யார்?
- தினம் ஒரு குர்ஆன் வசனம்
No comments:
Post a Comment