சிதம்பரம் : சான்றிதழ் சரிபார்க் கப்பட்ட 853 உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக்கோரி தமிழ்நாடு வேலையில்லா உடற் கல்வி ஆசிரியர் கழகம் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ராமசாமி முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள மனு: சமச்சீர் கல்வியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி கல்வித்துறையில் பல் வேறு வளர்ச்சித் திட்டங் கள் செயல்படுத் தப்பட்டு வருகிறது.
மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையில்
செயல்படும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 900க்கும் மேற்பட்ட முதுநிலை மற்றும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமணம் செய்யப்பட்ட நிலையில், மிக குறைந்த அதாவது 853 உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இசை, ஓவியம், தையல் ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை.
பிற பாடங்களில் தேர்வானவர்கள் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் உடற்கல்வி குறித்து வெளியிடப்பட வில்லை. எனவே தேர்வு செய்யப்பட்டுள்ள உடற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar
No comments:
Post a Comment