அமெரிக்காவில்ங உள்ள விர்ஜீனியா மகாணத்தை சேர்ந்த 42 வயது பெண் குழந்தை இல்லாமல் மனவருத்தத்தில் இருந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் கிழக்கு விர்ஜினியாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் டாக்டர் செர்ஜியோ ஓக்னிஞ்சரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
அவரது கருமுட்டையை டாக்டர் பரிசோதனை செய்தார். அப்போது அவரது கருமுட்டை குழந்தை பெற தகுதியில்லை என தெரிய வந்தது. இதை தொடர்ந்து வேறு ஒரு பெண்ணின் கருமுட்டை மூலம் அவர் குழந்தை பெற முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், அப்பெண் 20 வருடத்துக்கு முன்பு தனது கருமுட்டையை கரு வங்கியில் பத்திரப்படுத்தி வைத்திருப்பது நினைவுக்கு வந்தது. அது கெடாமல் உறைந்த நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து தனது உறைந்த கரு முட்டையுடன் கணவரின் உயரணுவை சேர்த்து குழந்தை பெற வைத்தனர். இது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
Source: maalai malar

No comments:
Post a Comment