Islamic Widget

September 16, 2010

வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடலூர்: சுருக்கு முறை திருத்த புகைப்பட வரைவு வாக் காளர் பட்டியலை நேற்று கலெக்டர் நடராஜன் (பொறுப்பு) வெளியிட் டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மாவட் டத்தில் உள்ள 9 சட்ட சபை தொகுதிகளுக்கும் 1.7.2010 முதல் 26.7.2010 வரை பொது மக்கள் தங்களது பெயர் வாக்கா ளர் பட்டியலில் பதிவு செய்யப்பட் டுள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளுமாறும், பெயர் விடுபட்டிருப்பின் படிவம் 6ஐ பூர்த்தி செய்து தங்களது பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் விண் ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு கடலூர் மாவட்டத்தில் பெயர் சேர்த்தலுக்காக ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 131 மனுக்கள் பெறப்பட்டு கள விசாரணை அடிப்படையில் 91 ஆயிரத்து 126 மனுக்கள் தகுதியுள்ளவையாக கண்டறியப்பட்டு பெயர் சேர்க்கப்பட்டுள் ளது. 2010ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் 9 சட்ட சபை தொகுதிகளுக்கும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.








தொகுதி வாரியாக இறுதி வரைவு வாக்காளர் களின் எண்ணிக்கை விவரம் வருமாறு: திட்டக்குடி(தனி) ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 238 , விருத்தாசலம் ஒரு லட் சத்து 88 ஆயிரத்து 286, நெய் வேலி ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 510, பண்ருட்டி ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 164, கடலூர் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 398, குறிஞ் சிப்பாடி ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 592, புவனகிரியில் 2 லட்சத்து 164, சிதம் பரம் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 522, காட்டுமன்னார் கோயில் (தனி) ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 644 வாக்காளர்களும் உள்ளனர்.

No comments:

Post a Comment