Islamic Widget

August 19, 2010

கொலை செய்து எரிக்கப்பட்ட நபர் முஸ்லிமா?: போலீசார் விசாரணை

கடலூர் : கடலூர் பெண்ணையாற்றில் கொலை செய்து முகம் எரிக்கப்பட்ட வாலிபர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். கடலூர் பெண்ணையாற்றங்கரையில் கடந்த 12ம் தேதி 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் முகம் மற்றும் மார்பு பகுதி எரிந்த நிலையில் கிடந்தது. இறந்தவரின் தலை மற்றும் உடலில் பல இடங்களில் கத்தி வெட்டுக் காயங்கள் இருந்தன. கொலை செய்யப்பட்ட நபர் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தை எரித்துள்ளனர். கொலையான நபர் கைலியும், வெள்ளை நிற சட்டையும் அணித்திருந்தார். கையில் "ரஜினி' என பச்சை குத்தியிருந்தார். மேலும் அவர் "சுன்னத்' செய்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே கொலை செய்யப்பட்டவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். வேறு மாவட்டத்திலிருந்து கடத்தி வந்து கொலை செய்து ஆற்றங்கரையில் போட்டு எரித்திருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் அண்டை மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் பட்டியலை போலீசார் கணக்கெடுத்து வருகின்றனர். கொலையானவர் குறித்து ஒரு வாரமாகியும் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. தகவலறிந்தவர்கள் 9443439171 மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment