பரங்கிப்பேட்டை: பு.முட்லூரில் இருந்து தச்சக்காடு வழியாக புதுச் சத்திரம் செல்லும் சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக் கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட் லூரில் இருந்து மஞ்சக்குழி, அருண் மொழிதேவன், தச் சக்காடு, சேந்திரக்கிள்ளை, பால்வாதுண்ணான் வழியாக புதுச்சத்திரத்திற்கு நெடுஞ்சாலை துறை சாலை உள்ளது. இச் சாலை வழியாக தினமும் இரண்டு அரசு டவுன் பஸ்கள் இயக் கப்படுகிறது...
100க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின் றன. ஆனால் சாலை குண் டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளனர். மழைக் காலங்களில் குண்டும், குழியுமாக உள்ள இடங்களில் தண் ணீர் தேங்கி குட்டை போல் இருப்பதாலும், மேலும் தச்சக்காடு, அருண்மொழிதேவன், சேந்திரக்கிள்ளை, மஞ்சக் குழி ஆகிய கிராமங்களில் அரும்பு, குண்டு மல்லி உள்ளிட்ட பூ வகைகள் அதிகளவில் பயிர் செய்து வருகின்றனர். பூ வகை களை விற்பனை செய்ய பு.முட்லூருக்கு மொபட், சைக்கிள் உள் ளிட்டவைகளில் செல்வதால் வாகனங் கள் அடிக்கடி பழுதாகி விடுகிறது. குறிப் பிட்ட நேரத் திற்கு பூ வகைகளை எடுத்துச் செல்ல முடியாததால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. பு.முட்லூரில் இருந்து புதுச்சத்திரம் வரையிலான சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் சீர் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: Dinamalar
August 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
- 4,000 ரூபாயில் 4G டேப்லெட் கம்ப்யூட்டர். - ரிலையன்ஸ் திட்டம்
- ஈரான்:மொசாத் ஏஜண்டிற்கு மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது!!!
- வாகன நம்பர் பலகையில் இஷ்டத்துக்கு எழுதுபவரா நீங்கள்:போலீஸ் பிடிக்கும் ஜாக்கிரதை
- புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் கூடாது
- மீராப்பள்ளி நோன்பு பெருநாள் தொழுகை (படங்கள்)
- கடலூா் சிப்காடினால் பாதிப்பு சில வீடியோ காட்சி
- மாபெரும் புனித ஹஜ் சிறப்பு நிகழ்ச்சி! குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
- புதிய பள்ளிவாசல் வாத்தியாப்பள்ளி
- ஹஜ் பயணத்திற்கான ஒப்பந்தம்:மத்திய உயர்மட்டக்குழு நாளை முடிவு செய்கிறது
- தற்போதைய தங்க விலை நிலவரம்:
No comments:
Post a Comment