Islamic Widget

August 31, 2010

108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அலைகழிப்பு! தேவையற்ற அழைப்புகளால் விரக்தி


கடலூர்: தேவையற்ற அழைப்புகளால் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அலைகழிக்கப்படுகின்றனர். மக் களின் அவசர தேவைக் காக ஆம்புலன்ஸ் சேவை உள்ளதால் அவசியமற்ற அழைப்புகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். விபத்து, பிரசவம், விஷக்கடி உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக பொது மக்கள் விரைந்து சென்று மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்காக அரசு 108 ஆம்புலன்ஸ் சேவையை கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி துவக்கியது. மாவட்டத்தில் கடலூர், நெல் லிக்குப்பம், பண் ருட்டி, காடாம்புலியூர், சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், மந்தாரக்குப்பம், ஸ்ரீமுஷ்ணம், திட்டக்குடி, வேப் பூர், சிதம்பரம், புதுச்சத்திரம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி ஆகிய 15 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இயங்கி வருகிறது....

இச்சேவை துவங்கிய 21 மாதங் களில் வந்த 65 ஆயிரம் அழைப்புகளில் 60 ஆயிரம் அழைப்புகளில் நோயாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். ஆம்புலன்சில் இதுவரை 168 குழந்தைகள் பிறந்துள்ளன. வேப் பூரில் இரட்டை குழந்தை பிறந் துள்ளது. மாதந்தோறும் 2,500 முதல் 3,000 அழைப்புகள் வரை 108க்கு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் விபத்தில் பாதிக்கப் பட்டு உயிருக்கு ஆபத் தான நிலையில் உள்ள 600 பேர் காப்பாற் றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாதந் தோறும் 108க்கு 400 முதல் 500 அழைப்புகள் தேவையற்ற, அவசியமற்றதாக வருகின்றன. அதில் சாதாரண விபத்துகள், அடிதடி, வயிற்று வலி உள்ளிட்ட தேவைகளுக்கும் 108 ஆம்புலன்ஸ் அழைக் கப்படுகின்றன. மேலும், பாதிக்கப்பட்டவருடன் அவரது உறவினர்கள் 5 முதல் 10 பேர் வரை 108 ஆம்புலன்சில் ஏறி அமர்ந்து விடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முடியாமல் ஆம்புலன்சில் உள்ளவர்கள் அவதியடைகின்றனர். மேலும் சாதாரண விபத்துகளில் பாதிக்கப்பட்ட சிலர் 108 ஆம்புலன்சில் சென்றால் தான் மருத்துவமனையில் சேர்த்துக் கொள்வார் கள் என்ற தவறான எண்ணத்தால் 108க்கு போன் செய்கின்றனர். இதுபோன்ற தேவையற்ற அழைப்புகளால் 108 டிரைவர்கள் அலைகழிக்கப்படுவதால் வேறு பகுதிகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவர் களை குறிப்பிட்ட நேரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. பொது மக்களின் அவசரத் தேவைக்காக செயல்பட்டு வருவது தான் 108 ஆம்புலன்ஸ் சேவை. இதனை பொது மக்கள் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவருடன் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே சென்றால் ஆம்புலன்சில் உள்ள செவிலியர்கள் முதலுதவி அளிக்க வசதியாக இருக்கும். பிரசவம், விஷக்கடி, நடக்க முடியாத நிலை உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு மட்டுமே பொது மக்கள் 108ஐ நாட வேண்டும். அவசியமற்ற அழைப்புகளைத் தவிர்த் தால் வேறு ஏதோ ஒரு இடத்தில் ஆபத்தான நிலையில் உள்ளவரின் உயிர் காப்பற்றப்படும். டிரைவர்களுக்கு பாதுகாப்பில்லை! சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் பகுதியில் கடந்த 28ம் தேதி இரவு ஒரு சிறு விபத்து ஏற்பட்டதில் முதியவர் ஒருவரின் கையில் லேசான சிராய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரை அழைத்துச் செல்ல 108ற்கு போன் செய்துள்ளனர். அப்போது புதுச்சத்திரத்தில் இருந்த 108 ஆம்புலன்ஸ் வேறு ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதால், குள்ளஞ்சாவடி ஆம்புலன்ஸ் அனுப்பட்டது. சம்பவ இடத்திற்குச் சென்ற குள்ளஞ்சாவடி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேஷ்ராவ் என்பவரை அங்கிருந்த சிலர் குடிபோதையில் வாழை மட்டையால் தாக்கியுள்ளனர். அதில் ராஜேஷ்ராவின் காது முற்றிலும் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேப் போன்று புவனகிரி பகுதியில் மூன்று மாதங்களுக்கு முன் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் ஜெயக்குமார் தாக்கப்பட்டார். இது போன்ற தாக்குதல் சம்பவங்களால் டிரைவர்களுக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

Source: Dinamalar

No comments:

Post a Comment