Islamic Widget

August 27, 2010

பருப்பு-சர்க்கரை விலை குறைந்தது

பருப்பு-சர்க்கரை விலை குறைந்தது

பருப்பு, சர்க்கரை, மிளகாய் வற்றல் விலை கிலோவுக்கு 5 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.மளிகை பொருட்களான பருப்பு, மிளகாய் வத்தல், தனியா உள்பட பல பொருட்களின் விலை கடந்த மாதம் வரை ஏறிக்கொண்டே சென்றது.
 
ஆனால் தற்போது அனைத்து பொருட்களின் விலையும், “மளமள” என கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்து விட்டது.
துவரம் பருப்பு முதல் ரகம் கிலோ ரூ.68ல் இருந்து 63 ஆகவும், 2-ம் ரகம் ரூ.63ல் இருந்து 58 ஆகவும் குறைந்துள்ளது.
பாசிப்பருப்பு முதல் ரகம் ரூ.88ல் இருந்து ரூ.78 ஆகவும், 2-ம் ரகம் ரூ.75ல் இருந்து ரூ.65 ஆகவும் கிலோவுக்கு குறைந்துள்ளது.
உளுந்தம் பருப்பு கிலோ ரூ.80ல் இருந்து ரூ.76 ஆகவும், 2-ம் ரகம் ரூ.70 இருந்து ரூ.65 ஆகவும் குறைந்துள்ளது.
மிளகாய் வத்தல் கிலோ ரூ.120ல் இருந்து ரூ.80 ஆக குறைந்து விட்டது. 2ம் ரகம் ரூ.100ல் இருந்து ரூ.60 ஆக குறைந்துள்ளது. நீள மிளகாய் வத்தல் ரூ.70ல் இருந்து ரூ.55 ஆகவும் குறைந்துள்ளது.
ராமநாதபுரம், பரமக்குடி, விளாத்திகுளம் பகுதிகளில் விளைச்சல் அதிகமானதால் மிளகாய் வற்றல் விலை குறைந்துள்ளதாக அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பிரண சொரூபன் கூறினார்.
இதே போல் சர்க்கரை விலையும் வேகமாக குறைந்து வருகிறது. ஒரு கிலோ சர்க் கரை கடந்த ஆண்டு ரூ.48க்கு விற்கப்பட்டது. போன வாரம் ரூ.30க்கு விலை இறங்கியது. இன்று கிலோ ரூ.28க்கு விற்கப்படுகிறது.
வடமாநிலங்களில் கரும்பு விலைச்சல் அதிகமானதாலும், மழை காலமாக இருப்பதால் ஜூஸ், குளிர் பானம் போன்றவற்றின் உபயோகம் குறைந்துள்ள காரணத்தாலும் வெளிநாட்டில் இருந்து சர்க்கரை இறக்குமதியாவதாலும் விலை குறைந்து வருகிறது. இன்னும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதே போல் பாமாயில் கிலோ ரூ.52ல் இருந்து ரூ.47 ஆகவும், கடலை எண்ணை விலை ரூ.85ல் இருந்து ரூ.79 ஆகவும் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment