கடலூர் நஞ்சலிங்கம்பேட்டையை சேர்ந்த சங்கரன் (வயது50)¢, ஏழுமலை(53) மற்றும் கருப்பன்(55), சேகர்(42) உள்பட 5 மீனவர்கள் கடந்த 19-ந் தேதி விசைப்படகு மூலம் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
22-ந் தேதி மீண்டும் கரை திரும்ப வேண்டிய 5 மீனவர்களும் மேலும் சில நாட்களாகியும் மீண்டும் கரை திரும்பவில்லை. இதனால் அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் அந்த விசை படகின் உரிமையாளர்கள் கவலை அடைந்தனர்.
மாயமான மீனவர்களை மீட்டு தருமாறு அவர்கள் கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சீனிவாசன், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாயமான மீனவர்களை மீட்க கடலோர காவல்படையினர் அதிவேக ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர். எனினும் இதுவரை பலனில்லை.
வங்க கடலில் ஏற்பட்டு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நடுக்கடலில் வன்னிவெள்ளம் எனப்படும் அதிவேக நீரோட்டம் காணப்பட்டதாக கூறப்படுகிறது. 5 மீனவர்களும் சென்ற விசைப்படகு இந்த நீரோட்டத்தில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
கடலோர காவல் படையினரின் தீவிரதேடுதல் பணில் மாயமான 5 மீனவர்களும் இதுவரை மீட்கப்படாததால் அவர்களது கதி என்ன? என அவர்களுடைய குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர். மாயமான மீனவர்களை தேடும் பணியில் கடலோர காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
August 27, 2010
கடலில் மீன்பிடிக்க சென்றபோது மாயமான 5 மீனவர்களின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்
Labels:
மாவட்டச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
- சி.புதுப்பேட்டை: அறுந்து கிடந்த மின் கம்பியைதொட்ட பெண் உடல் கருகி சாவு!
- நஷ்டவாளர்கள் யார்?
- பரங்கிப்பேட்டை: அரசு மருத்துவமனையில் பழமையான மரம்! ஆபத்து ஏற்படும் முன் அகற்றப்படுமா
- ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையாரை ஆதரித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் காதர் மொய்தீன் பிரசாரம்
- கார் டிரைவரை தாக்கிய இரண்டு பேர் கைது
- பரங்கிப்பேட்டை :மீனவ கிராமங்களுக்கிடையே மோதல்
- சிதம்பரம் தொகுதியில் மிரட்டுகிறது பா.ஜ., அரண்டு போயுள்ளது அ.தி.மு.க., - தி.மு.க.,
- அ.தி.மு.க., வுடன் கம்யூ., கூட்டணி ஆச்சர்யமாக உள்ளது: ராமதாஸ்
- புதிதாக கட்டப்படும் வாத்தியாப்பள்ளி
- பரங்கிப்பேட்டையில் வாலிபால் போட்டி!
No comments:
Post a Comment