Islamic Widget

August 20, 2010

நோன்பு - குரான் வாசிப்புடன் ரகசிய இடத்தில் மதானி; சுகர் இருப்பதால் முழு கவனத்துடன் போலீசார்


பெங்களூரு தொடர்குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட அப்துல்நாசர் மதானி கர்நாடகாவில் ரகசிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். இவரிடம் இதுவரை போலீசார் எந்த கேள்விக்கணையும் தொடுக்கவில்லையாம். மதானிக்கு நீரிழிவு ( சுகர் ) நோய் இருப்பதால் அவரது உடல்நிலையை கண்காணிப்பதில் போலீசார் முழு அக்கறையுடன் இருப்பதாக கர்நாடக போலீஸ் வட்டாரத்தின் அடிப்படையில் செய்திகள் வெளியாகியிருக்கிறது.

மதானியை டாக்டர்கள் பரிசோதித்தனர்: கேரளாவில் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்த போலீசார் பெங்களூரு கொண்டு சென்று ரிமாண்ட் செய்யப்பட்டார். 26 ம் தேதி வரை போலீஸ் கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது யாரும் அறிய முடியாத இடத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுளார். மதானியை டாக்டர்கள் பரிசோதித்து உடல் நிலை குறித்து அறிந்து கொள்ள போலீசார் ஏற்பாடு செய்தனர்.

இதில் மதானியின் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனை போலீஸ் இணை கமிஷனர் ( குற்றப்பிரிவு ) உறுதி செய்தார். குரானும் கையுமாக இருக்கிறார் : மதானி எந்த நேரமும் குரான் படித்தவாறு இருக்கிறார். இவர் ரமலான் நோன்பு இருந்து வருவதால் இவருக்கு கொடுக்கும் உணவு வகைகளை அதிகாலை பொழுதிலும், பின்னர் மாலை நேரத்திலும் எடுத்து வருகிறார்.

இவர் சிறிது அளவே உணவு சாப்பிடுவதாக அருகில் துணையாக அமர்த்தப்பட்டிருக்கும் போலீஸ் ஒருவர் கூறினார். உணவு வகைகள் என்ன ? : மதானிக்கு போலீசார் வழங்கும் மெனு விவரம் வருமாறு : எலுமிச்சம்பழம் சாறு, உலர் பழ வகைகள் ( பாதாம், திராட்சை, முந்திரி மற்றும் கொட்டை வகைகள்) . ரொட்டித்துண்டு, அரிசி சாதம், வேக வைத்த காய்கறி வகைகள் ஆகும்.

மதானியின் வக்கீல் உஸ்மானுக்கு அவரை சந்திக்க போலீசார் அனுமதி அளித்தனர். ரமலான் நோன்பு மற்றும் மத ரீதியான உரிமைகள் எதுவும் பாதிக்கப்படுகிறதா என்றும் மதானியிடம் விசாரித்து கேட்டுள்ளார். நோன்பு இருப்பதால் இவரிடம் இதுவரை நாங்கள் எந்தவொரு கேள்வியும் கேட்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment