Islamic Widget

July 21, 2010

சிங்கப்பூர்: நான்கு பேரில் ஒருவர் இந்தியர்

சிங்கப்பூரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் நான்கு பேரில் ஒருவர் இந்தியராக உள்ளதாக இங்கிருந்து வெளியாகும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து இங்கு வருபவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், சிங்கப்பூர் நகரில் வசிக்கும் ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் இந்தியராக உள்ளனர்.சிங்கப்பூர் நகரில் வசிக்கும் மொத்த மக்கள் தொகை 1.79 மில்லியன் ஆகும். இதில் 4 லட்சம் பேர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்களாக உள்ளனர்.மேலும் சிங்கப்பூர் நகரில் இந்தியர்கள் தொடங்கும் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.கடந்த 2006 ல் 1,500 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 3,000 ஆக அதிகரித்துள்ளது. தகவல் தொழில் நுட்பம், நிதிச் சேவை, வர்த்தகம் மற்றும் உணவு பொருட்கள் போன்ற துறைகளிலேயே இந்தியர்கள் அதிக அளவிலான தொழில் நிறுவனங்களை தொடங்கியுள்ளதாக சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் "தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்" என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ismailpno

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் அன்பரே ,
    தாங்கள் படித்த ஊடக செய்தி தவறானது .. சிங்கை சிறிய நாடுதான் .. ஆயினும் மக்கள் தொகை நீங்கள் குறிப்பிட்டதல்ல .. நீங்க கொடுத்த 1.79 மில்லியன் மக்கள் தொகை வெளிநாட்டிலிருந்து வந்து தங்கி வேலை செய்பர்களின் எண்ணிக்கை .. இதில் PR கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை ... வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை இப்போது இன்னும் கூடி விட்டது .. singapore citizen + PR மக்கள் தொகை இப்போது 3.8 மில்லியன் . தங்கள் இதை உறுதிப்படுத்திக்கொள்ள http://www.singstat.gov.sg/stats/charts/popn-area.html என்ற இணையத்தளம் சென்றால் அறியலாம் ...

    ReplyDelete