
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழ்நாட்டில் 24
மணி நேரத்துக்கு மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை
ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின்
அருகே தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன்
காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தீவிரம் அடைந்து தாழ்வு மண்டலமாக மாறும்
வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்துக்கு
அநேக இடங்களில் பரவலாக மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிகப்பலத்த மழை பெய்ய
வாய்ப்பு உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்ப
வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment