பரங்கிப்பேட்டை: தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகை (ஹிஜ்ரி 1433) ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் இன்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர். வழக்கம் போன்று, பெண்களுக்கான தொழுகை ஏற்பாடு மினி ஷாதி மஹாலில் செய்யப்பட்டிருந்தது. பெண்கள் திரளாக வந்து தொழுகையில் பங்கு கொண்டனர்.
அதேபோன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பரங்கிப்பேட்டை கிளை சார்பில் நடைபெற்ற பெருநாள் தொழுகை பெரிய ஆசரகாணா தெருவில் உள்ள ஒரு திடலில் நடைபெற்றது. இதிலும் பெண்கள் தொழுகைக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. இத்திடல் தொழுகையில் தமிழில் குத்பா உரை நிகழ்த்தப்பட்டது.
நன்றி:mypno
No comments:
Post a Comment