Islamic Widget

October 29, 2012

பரங்கிப்பேட்டை மீன்பிடி இறங்குதளம்: பணிகள் ஜரூர்!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை வத்தக்கரையில் 13 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் கட்டும் பணிக்காக வெள்ளாற்றில் டிரஜ்ஜர் இயந்திரம் மூலம் தூர் வாரும் பணிகள் ஜருராக நடந்து வருகிறது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராம மீனவ கிராம மக்களின் வாழ்வாதாரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பரங்கிப்பேட்டை கடற்கரையை சுற்றியுள்ள கிராமங்களான சாமியார்பேட்டை, புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், புதுப்பேட்டை, முடசல் ஓடை, பரங்கிப்பேட்டை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை முகத்து வாரம் வழியாக படகில் கடலுக்குச் சென்று பிடித்து வருகின்றனர்.
அகிலா, சூரை, சுங்கான், வஞ்சிரம், மத்தி உள்ளிட்ட மீன் வகைகள் தினமும் 100 டன் அளவிற்கு கேரளா, கர்நாடகா, கோவா மாநி லங்களுக்கு 20க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் தினமும் எடுத்துச் செல்லப்படுகிறது. கடலில் இருந்து படகுகள் மூலம் கொண்டு வரும் மீன் வகைகள் மண் தரையில் சுகாதாரமற்ற நிலையில் பேக்கிங் செய்து எடுத்துச் செல்வதால் கேரளா மாநிலம் கொச்சினில் அதிக விலைக்கு எடுப்பதில்லை. மீனவர்களுக்கு போதுமான லாபம் கிடைப்பதில்லை.

பரங்கிப்பேட்டையில் இருந்து படகில் இருந்து மீன்கள் ஆட்கள் மூலம் நீண்ட தூரம் எடுத்துச் சென்று பேக்கிங் செய்வதால் மீனவர்களுக்கு அதிக செலவு ஏற்பட்டு வந்தது. இதனால் பரங்கிப்பேட்டையில் மீன்பிடி இறங்குதளம் கட்டித்தரக்கோரி கடந்த 20 ஆண்டுகளாக அரசுக்கு 30 கிராம மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதிக்கு அருகில் இருக்கும் வெள்ளாற்றங்கரை ஓரம் 13 கோடியே 50 லட்சம் மதிப்பில் மீன் பிடி இறங்கு தளம் அமைக்க மூன்று மாதத்திற்கு முன்பு டெண்டர் விடப்பட்டது.



தற்போது பணிகள் துவக்கி, வெள்ளாற்றை ஆழப்படுத்த டிரஜ்ஜர் என்ற இயந்திரம் மூலம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. கடலில் இருந்து பிடித்து வரும் மீன்கள் ஏலம் விடுவதற்கும், மீனவர்களின் வலைகளை காய வைக்கவும், வலையை பின்னவும் தனித்தனியாக கட்டடங்கள் கட்டப்பட உள்ளது. மீன் விற்க மூன்று கட்டடங்களில் 120 அறைகள் கட்டப்படுகிறது. கழிவறை, குடிநீர், வாகனங்கள் பார்க்கிங் வசதி, நிர்வாக அலுவலகம், மீன் பதப்படுத்தும் ஐஸ் பிளான்ட் வசதிகள் செய்யப் படுகிறது. இந்த பணிகள் வரும் சில மாதங்களில் முடிந்து விடும் என அதிகாரிகள் கூறுகின்றனர். பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள 30 மீனவ கிராம மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதுடன் வாழ்வாதார மும்அதிகரிக்கும். இந்த பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 நன்றி :MYPNO

No comments:

Post a Comment