Islamic Widget

August 24, 2012

அஸ்ஸாம் வன்முறை - எம்.எல்.ஏ. கைது!

கௌஹாத்தி - அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் பிரதீப் பிரமாவை காவல்துறை கைது செய்துள்ளது.

கோக்ராஜ்ஹர் (மேற்கு) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பிரமா ஆளும் காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த போடோலேண்ட் மக்கள் முன்னணி என்ற கட்சியின் சார்பில் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
பிரம்மா மீது மாநிலத்தின் பல்வேறு காவல்நிலையங்களிலும் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் வியாழக் கிழமை அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

அஸ்ஸாம் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 4இலட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment