சென்னை:தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெருமளவிலான வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட பிறகும் அதனை ஒரு சாதாரண செய்தியாகவே ஊடகங்கள் வெளியிட்டன.
அண்மையில் பா.ஜ.க மதுரை மாநாட்டிற்கு முன்பாக சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த வீரியம் குறைந்த எவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத குண்டுவெடிப்பு தொடர்பாக முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு தொந்தரவுச் செய்த போலீசாரும், அதனை பரபரப்பான செய்தியாக வெளியிட்ட ஊடகங்களும் மிகப்பெரிய அளவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ள வெடிப்பொருட்கள் குறித்து எவ்வித பரபரப்பையும் காட்டவில்லை.
ஊடகங்களின் இத்தகைய போக்கு புதிதல்ல என்றாலும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் பின்னணியில் பலத்த மர்மம் நீடிக்கிறது.
கடந்த சிலநாட்களில் தமிழகத்தில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட இரண்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
அவை
அரூர் அருகே வெடிபொருட்கள் கடத்திய வழக்கில் மினி லாரி உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர். அரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீஸார் கடந்த 24ம் தேதி காலை 11.30 மணியளவில் அரூர்-சேலம் பைபாஸ் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பத்தூரிலிருந்து- சேலம் நோக்கி வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மினிலாரியின் பின்புறம் ரகசிய அறை அமைத்து, 40 பெட்டிகளில் தலா, 500 டெட்டனேட்டர்கள் வீதம், 20,000 டெட்டனேட்டர்கள் வெடிக்க பயன்படும் திரிகள் 54 ரோல்கள் என 4 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெடிப்பொருட்கள் ரகசிய அறையில் இருந்தது. மினி லாரியையும், வெடி பொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் மினி லாரியை ஓட்டிவந்த திருப்பத்தூர் தண்டபாட கோவில் தெருவை சேர்ந்த சுரேஷ்(26) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மினி லாரி உரிமையாளர் சேலம் அம்மா பேட்டையை சேர்ந்த சங்கர்(26) என்பவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் ஊத்துமலை பகுதியில் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என இன்ஸ்பெக்டர் பெலிக்ஸ் சுரேஷ்பீட்டர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். முத்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் பம்புசெட் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,530 எலெக்ட்ரிக் டெட்டனேட்டர்கள், சிலரி, 200 கிலோ அம்மோனியம் நைட்ரேட் உப்பு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த பால்ராஜ்(61), அவர் மகன் சவுந்தரராஜ்(33) கைது செய்யப்பட்டனர். லோடு ஆட்டோ கைப்பற்றப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு சம்பவங்களின் பின்னணிக் குறித்து போலீசாரும் துருவிதுருவி விசாரணை நடத்தப் போவதில்லை. ஊடகங்களும் இதன் பின்னணி குறித்து தோண்டி துருவப்போவதில்லை. ஆனால், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடக்கும் பொழுது முஸ்லிம்கள் மீது பழியைப்போட்டு சில முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்வதிலேயே இவர்கள் குறியாக இருப்பார்கள்.
முஸ்லிம் அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இதுக்குறித்து என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறார்கள்?
No comments:
Post a Comment