Islamic Widget

March 04, 2012

தானே! வீடுகள் கட்டும் பணி.

பேரூராட்சித் தலைவரும், கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான M.S முஹம்மத் யூனுஸ் குழுமத்தில் ஒரு பதிவு வைத்து இந்தப் பதிவையே பரங்கிப்பேட்டை இஸ்லாமிய பத்திரிக்கையாளர்கள் எமது அறிவிப்பாய் எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளதை ஏற்று அந்த அறிவிப்பை வாசர்களுக்கு வழங்குகிறோம். (எடிட்டர்)
பரங்கிப்பேட்டையில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்அமைப்பினரின் பணிகள்
“தானே”புயலால் பாதிக்கப்பட்ட குடிசைகளை புனர் நிர்மாணிக்க ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்அமைப்பினரை தொடர்பு கொண்டு உதவி கோரினேன்.
அவர்களும் எனது வேண்டுகோளை மனதார ஏற்று வெவ்வேறு நாட்களில் மும்முறை எம்முடன் பரங்கிப்பேட்டை குடிசை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.பின் அவர்களுடன் கலந்தாய்வு செய்து டெல்லி சாஹிப் தர்கா பகுதியிலுள்ள 31 குடிசைகளைபுனரமைத்து தருவதென முடிவெடுக்கப்பட்டது.
ஜனாப். கரீமுல்லாஹ், செயலர், தமிழக ஜமாஅத்தேஇஸ்லாமி ஹிந்த் அவர்கள் தலைமையில் இன்று (03/03/2012) தமிழகம், கேரளா, கர்நாடகாமாநிலங்களை சேர்ந்த அவ்வமைப்பின் 70 தன்னார்வ தொண்டர்களின் குழு இப்பணிக்காக பரங்கிப்பேட்டை வந்திறங்கியுள்ளது.அவர்களில் பலர் நன்கு படித்தவர்கள், வியாபாரிகள். அவர்கள் நமது ஜாமியா மஸ்ஜித் மீராப்பள்ளியில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மரங்கள், கழிகள், கூரை ஷீட்டுகள் லாரிகளில்டெல்லி சாஹிப் தர்கா பகுதிக்கு வந்த வண்ணமிருக்கின்றன. அவர்களாகவே பொருட்களைலாரிகளிளிருந்து இறக்குகின்றனர். நாளை அவர்கள் கைகளாலேயே குடிசைகளை கட்டதிட்டமிட்டுள்ளனர்.
விளம்பரங்களோ, பரபரப்போ இல்லாது ஜமாஅத்தேஇஸ்லாமி ஹிந்த் அமைப்பினரின் தொண்டுள்ளம் போற்றத்தக்கது. இவர்கள் நமது முஸ்லிம்சமுதாயத்திலுள்ள பொது நலம் நாடுபவர்களுக்கு முன்னுதாரணமாய் விளங்குகின்றனர். அல்லாஹ்அவர்களுக்கு நல்லருள் புரிவானாக.
******
கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக (குறிப்பாய் திருச்சி மாவட்டத்திலுள்ளவர்கள்) இஸ்லாமிய சகோதரர்கள் குடிசைகளை பழுது நீக்க வேண்டி 20,000 தென்னங்கீற்றுக்கள் கடலூருக்குலாரிகளில் அனுப்பியுள்ளனர். அவைகளில் பரங்கிப்பேட்டைக்கு 7,000 கீற்றுக்கள்ஒதுக்கப்பட்டு இங்கு வந்தடைந்துள்ளன. மேலும் நமது வேண்டுகோளுக்கு செவி சாய்த்ததுபாய் வர்த்தக பெருமகனாரொருவர் கருணையுள்ளங்கொண்டு 50,000 தென்னங்கீற்றுக்கள்கடலூர் மாவட்ட ஜமாஅத்திற்கு அனுப்புவதாய் வாக்களித்துள்ளார். அவைகளில் இன்ஷாஅல்லாஹ் 20,000 கீற்றுக்கள் பரங்கிப்பேட்டைக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளோம்.
பரங்கிப்பேட்டை இஸ்லாமிய சமுதாயபத்திரிக்கையாளர்கள் இச்செய்தியையே எமது அறிவிப்பாய் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

இங்ஙனம்,

M.S. முஹம்மது யூனுஸ், தலைவர்,
பரங்கிப்பேட்டை ஊராட்சி மன்றம் & கடலூர் மாவட்ட ஐக்கிய ஜமாஅத்.

No comments:

Post a Comment