Islamic Widget

April 02, 2011

ஜிமெயிலின் ஏப்ரல் ஃபூல்!(வீடியோ)

"ஜிமெயில் மோஸன்" என்ற புதிய வகை தகவல் தொடர்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூகுள் ஏப்ரல் 1 ஆம் தேதி ஏப்ரல் ஃபூல் செய்தியொன்று வெளியிட்டு பயன்படுத்தாளர்களை ஏமாற்றியுள்ளது.
நேற்று கூகுள், தனது ஜிமெயில் சேவையில் புதியதொரு டெக்னாலஜி அறிமுகப்படுத்தியுள்ளதாக வீடியோ பதிவுடன் செய்தியொன்று வெளிட்டது.
 வீடியோ கேமரா பொருத்தப்பட்ட கணினியிலிருந்து சைகையின் மூலம் தகவல் அனுப்பி அதை ஜமெயிலில் அனைத்து பணிகளையும் தொடரும் விதத்தில் அச்சேவை அறிமுகப்படுத்தியது.






உதராணத்திற்கு ஜிமெயிலில் புதிய இமெயில் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு கையை எல் வடிவில் காட்டியும் மற்ற கையை தொள்பட்டையிலிருந்து நீட்டி காட்டினால் போதும். கீபோர்டை உபயோகம் செய்யாமல் புதிய மெயில் செய்ய பாக்ஸ் திறந்து கொடுக்கும். இதை போல் ஜிமெயிலில் செய்யும் அனைத்து சேவைகளையும் கீபோர்ட், மவுஸ் உதவியின்றி வெறும் சைகையின் மூலமே செய்யும் விதத்தில் அந்தச் சேவை அறிமுகம் செய்வதாக கூகுள் அறிவித்ததுவாய்பேச முடியாதவர்கள் பயன்படுத்தும் பொதுவான சைகை பயன்பாடுகளும் இதில் உபயோகம் செய்யலாம்.
அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் சைன் லாங்க்வேஜ் சைகைகளும் இந்த ஜிமெயில் மோஸன் புரிந்து கொண்டு தேவைகளைச் செய்து கொடுக்கும்.

இச்சேவையை கூகுள் அறிமுகம் செய்து வெளியிட்ட வீடியோவைப் பார்த்து நம்பிய பலர் அதனைப் பிறருக்கும் மெயில்கள் மூலமாகவும் பதிவுகள், செய்திகள் மூலமாகவும் பரப்பினர்.ஆனால், பின்னர் கூகுளே இது ஏப்ரல் ஃபூல் செய்தி எனக்கூறியது. கூகுளின் இந்த ஏமாற்று செய்தி பரவலாக மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

- தோப்புத்துறை அ. முஹம்மது நூர்தீன்,

அமெரிக்காவிலிருந்து…

No comments:

Post a Comment