கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீரில் திடீரென பெய்த பலத் த மழையில் இதுவரை 115 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். இதனால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது. ஜம்மு&காஷ்மீரில் மீண்டும் ஒரு வாரமாக கலவரம் நடந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 34 பேர் இறந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் லடாக் பிராந்தியத்தில் லே மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் காட்டாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்டவர்கள் அடித்துச் செல்லப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களில் இதுவரை 115 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இறந்தவர்களில் 3 ராணுவ வீரர்களும் அடங்குவர். அவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. மழை, வெள்ளத்தால் லே நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் சாலைகளில் 3 முதல் 4 அடி வரையில் களிமண் சேறு படிந்துள்ளது. மாவட்ட மருத்துவமனைகளும் சேற்றில் மூழ்கி பெரிதும் சேதம் அடைந்துள்ளன. இதனால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநில அரசு ஊழியர்களுடன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் சேர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பிரதமர் இரங்கல்புதுடெல்லி: மழை வெள்ளத்தால் காஷ்மீரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஸி1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இன்று நேரில் ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார்.
No comments:
Post a Comment