Islamic Widget

June 10, 2011

தனியார் சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது:20 பேர் படுகாயம்!

கடலூர் அருகே ஒரு தனியார் சொகுசு பேருந்து, மின்கம்பத்தில் மோதி குளத்தில் தலை குப்புற கவிழ்ந்ததில், 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று வியாழன் இரவு 11 மணி வாக்கில் சென்னை கோயம்பேட்டிலிருந்து ஒரு தனியார் சொகுசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு வேளாங்கன்னிக்கு புறப்பட்டது.
இன்று வெள்ளி அதிகாலை 3:30 மணியளவில் கடலூரைத்தாண்டி சிதம்பரம் செல்லும் வழியில் பூண்டியாங்குப்பம் கிராமம் அருகே, சாலை ஓரத்திலிருந்த மின்கம்பத்தின் மீது பேருந்து மோதியுள்ளது.மின்கம்பத்தில் மோதியதும் நிலை தடுமாறி, தாறு மாறாக ஓடிய பேருந்து ஒரு மரத்தில் மோதி, அதன் அருகே இருந்த குளத்தில் தலை குப்புற கவிழ்ந்துள்ளது. பேருந்து மோதிய சப்தத்தையும், பயணிகளின் கூக்குரலையும் கேட்ட அருகிலிருந்த கிராம மக்கள் ஓடி வந்து பார்த்து, கடப்பாறை போன்ற ஆயுதங்களை எடுத்து வந்து, பேருந்துக்குள் மாட்டிக்கொண்ட பயணிகள் அனைவரையும் காபாற்றியுள்ளனர். நல்ல வேளையாக குளத்தில் நீர் இல்லாததால் பயணிகள் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று அவர்களை காப்பாற்றிய கிராமவாசி ஒருவர் கூறியுள்ளார்.பேருந்தின் ஓட்டுநர் கண்ணயர்ந்ததால்தான் இவ்விபத்து நேர்ந்தது என்று பயணிகளில் ஒருவர் கூறியுள்ளார்.இவ்விபத்தில் படுகாயமடைந்த 20 பயணிகளும், இரு ஓட்டுநர்களும் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment