தமிழக சட்டப் பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி முன்னணியில் உள்ளதாக தமிழக மக்களிடையே தேர்தல் ஆய்வு நடத்தியுள்ள மக்கள் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
இன்றுள்ள நிலையில் யாருக்கு உங்கள் வாக்கு என்ற வினாவிற்கு பதிலளித்தோரில் 48.6 விழுக்காடு வாக்காளர்கள் அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான அணிக்கும் என்றும், 41.7 விழுக்காடு வாக்காளர்கள் தி.மு.க. தலைமையிலான அணிக்கே என்றும் கூறியுள்ளதாகவும், இன்னமும் 8.2 விழுக்காடு வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்பது பற்றி முடிவு செய்யாமல் உள்ளனர் என்றும் மக்கள் ஆய்வக கணிப்பு அறிக்கை தெரிவித்துள்ளது.சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் துறையில் பணியாற்றிவரும் பேராசிரியர் இராஜநாயகம் மேற்பார்வையில் மார்ச் மாதம் 21 முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் 117 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3,171 பேரிடம் கள ஆய்வு நடத்தப்பட்டதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மின்வெட்டிற்கு முதலிடம்
வாக்காளர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் மின் வெட்டிற்கே முதலிடம் கிடைத்துள்ளது. 25.2 விழுக்காடு வாக்காளர்கள் மின்வெட்டு முக்கிய பிரச்சனை என்றும், 14.2 விழுக்காட்டினர் விலைவாசியே முக்கிய பிரச்சனையென்றும், குடி தண்ணீர் 12.6%, போக்குவரத்து வசதி இல்லாதது 9.6%, பொது விநியோகம் சரியின்மை 8.5%, தொழில் வளர்ச்சி இல்லாதது 5.3%, மருத்துவ சுகாதார வசதியின்மை 5.1% ஆகியன அவர்களுடைய பிரச்சனைகளில் முன்னுரிமை பெற்றுள்ளன.
தேர்தல் ஆணையத்திற்கு வரவேற்பு
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை தமிழக முதல்வர் ‘அவசர நிலை’க் காலத்தோடு ஒப்பிடுகையில் வாக்காளர்களில் 60.5 விழுக்காட்டினர் அது பாரபட்சமற்ற வகையில், பொறுப்புணர்வுடன் செயல்படுவதாகக் கூறியுள்ளனர். அது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது என்று 24.7% கூறுகின்றனர்.
பணம் பெற்று வாக்களித்தது உண்மையே!
பணத்தைப் பெற்றுக்கொண்டு வாக்களிப்பது குற்றமே என்று 80.5 விழுக்காடு வாக்காளர்கள் கருதினாலும், தாங்கள் பணம் பெற்றுக்கொண்டு ஒருமுறையாவது வாக்களித்து உண்மையே என்று 47.9 விழுக்காடு மக்கள் தெரிவித்துள்ளனர் என்றும், பணத்தை வாங்கிக்கொண்டு வேறொரு வேட்பாளருக்கு வாக்களிப்பதில் தவறில்லை என்று 31.5 விழுக்காடு வாக்களர்களும் கருதுவதாக தெரியவந்துள்ளது என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.
59 தொகுதிகளில் கடும் போட்டி
அ.இ.அ.தி.மு.க. கூட்டணி 5 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளுடன் 105 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளதெனவும், தி.மு.க. கூட்டணி 70 தொகுதிகள் வரை முன்னணியில் உள்ளதாகவும், 59 தொகுதிகளில் இரு அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாகவும் ஆய்வறிக்கை கூறியுள்ளது

No comments:
Post a Comment