Islamic Widget

March 26, 2011

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்த்தப்படும்: ஜெயலலிதா!

முஸ்லிம்களுக்கு தமிழக அரசு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டின் அளவை உயர்த்தித் தருவேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.திருச்சி மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் மரியம் பிச்சையை ஆதரித்து ஜெயலலிதா வெள்ளிக் கிழமையன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், திமுக அரசு முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியிருந்தாலும் அது முறையாகச் செயல்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பதோடு, இட ஒதுக்கீடு முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதையும் கண்காணிப்போம் என்று கூறினார்.

முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து ஆலோசனை செய்வோம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது

No comments:

Post a Comment