Islamic Widget

March 25, 2011

ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பினால் 3 ஆண்டு ஜெயில் தண்டனை; ரூ.50 ஆயிரம் அபராதம்

இணையத்தளங்களில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து செல்போன்களில் எம்.எம்.எஸ். ஆக அனுப்பும் அநாகரீகம் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. திரைமறைவு செக்ஸ் காட்சிகளை வக்ரபுத்தி கொண்ட பலர் பெண்களுக்கு அனுப்பி தொல்லை கொடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.
எம்.எம்.எஸ்.தொல்லை அதிகரிப்பு குறித்து நாடெங்கும் அதிக அளவில் புகார்கள் வந்தபடி உள்ளன. இதையடுத்து மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் சட்ட திருத்தம் செய்ய மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது ஆபாச எம்.எம்.எஸ். அனுப்புபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.2 ஆயிரம் விதிக்கும் வகையில் சட்டம் உள்ளது. தொடர்ந்து எம்.எம்.எஸ். அனுப்பி மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வழிவகை உள்ளது. தற்போது வழங்கப்படும் இந்த தண்டனை போதாது என்றும், அதை திருத்தவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பி முதல் தடவை சிக்குபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதமும், 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும். அதே நபர் மீண்டும் ஆபாச எம்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5 லட்சம் வரை அபராதமும், அதிகபட்சமாக 5 ஆண்டு வரை ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது.

1 comment:

  1. தண்டனைகள் கடுமையனால் தான் குட்றங்கள் குறையும்

    ReplyDelete