புவனகிரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் கடலூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கல்யாணத்திடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது பா.ம.க. மாநில சொத்துப்பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி, கம்மாபுரம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஞானமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் திருமாறன், புவனகிரி ஒன்றிய குழு தலைவி தனலட்சுமி கலைவாணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் பா.ம.க. வேட்பாளர் அறிவுச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மிகவும் பின்தங்கிய தொகுதியான புவனகிரி தொகுதியில் உள்ள மக்களின் முன்னேற்றத்துக்காக நான் பாடுபடுவேன். புவனகிரி தொகுதியில் சென்ட் தொழிற்சாலை, மகளிர் அரசு கலைக்கல்லூரி, புத்தூர் பகுதியில் மணிமுக்தாற்றின் குறுக்கே பாலம் அமைக்கவும், இணைப்பு சாலைகள் அமைக்கவும் குரல் கொடுப்பேன். அதேபோல் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை கிடைக்கவும், நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாங்கி தரவும் பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வேல்முருகன் எம்.எல்.ஏ., பா.ம.க. மாநில துணை தலைவர் சண்முகம், துணைப் பொதுச்செயலாளர் திருமால்வளவன், முதனை செல்வராஜ், தேவதாஸ் படையாண்டவர், முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் திருஞானம் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஏற்கனவே கடலூர் மாவட்டம் வாழத் தகுதியற்ற மாவட்டமாக உள்ளது தொழிற்சாலைகளால் இன்னும் ஒரு தொழிற்சாலையா...?
ReplyDeleteசற்று நேரம் இருந்தால் இதை படித்து பார்க்க சொல்லவும்
http://www.sipcotcuddalore.com/downloads/why_Cuddalore_is_another_Bhopal.pdf
இன்னும் ஒரு தொழிற்சாலை...?