கிள்ளை : பிச்சாவரம் சுற்றுலா மைய படகு ஓட்டுனர்களை தனியார் படகு ஓட்டுனர்கள் மிரட்டியதைக் கண்டித்து நேற்று படகுகளை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் 35க்கும் மேற்பட்டோர் தினசரி கூலிக்கு படகு ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனி நபர்கள் சிலர் சுற்றுலாப் பயணிகளை தங்கள் படகில் அழைத்து செல்வதால் சுற்றுலா மைய படகு ஓட்டுனர்களுக்கு வருமானம் குறைந்தது.
தனியார் படகு இயக்குவதை தடுக்கக் கோரி சுற்றுலா மைய படகு ஓட்டுனர்கள் கலெக்டருக்கு கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக் கொண்டு படகு சவாரி செய்ததை சுற்றுலா மைய படகு ஓட்டுனர் ராஜா தடுத்ததால் தகராறு ஏற்பட்டது. அப்போது சுற்றுலா படகு ஓட்டுனர்களை இளஞ்செழியன் திட்டி, படகை விட்டு மோதுவதாக மிரட்டியுள்ளார். இதனால் சுற்றுலா மைய படகு ஓட்டுனர்கள் அனைவரும், தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். சுற்றுலா மைய பகுதியில் தனியார் படகு ஓட்டுவதை தடுக்க வேண்டும் எனக் கோரி நேற்று காலை படகுகளை ஓட்டாமல் "ஸ்டிரைக்'கில் ஈடுபட்டனர். அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்மந்தப்பட்டவர்களை அழைத்து பேசுவதாக உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து 30 நிமிட ஸ்டிரைக்குக்குபின் படகுகள் இயக்கப்பட்டன

No comments:
Post a Comment