பரங்கிப்பேட்டை : கடலூர், சிதம்பரம் மார்க்கத்திலிருந்து வரும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் புவனகிரி செல்லாமல் புறவழிச்சாலை வழியாக செல்வதை முழுமையாக தவிர்த்து தொலை தூர பஸ்கள், லாரிகள், கனரக வாகனங்கள் மட்டுமே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் புவனகிரி வழியாக தினமும் 1000க்கும் மேற்பட்ட பஸ்கள், கனரக வாகனங்கள் சென்று வந்தது. கடந்த ஆண்டு பு.முட்லூரில் இருந்து சி.முட்லூரை இணைக்கும் வகையில் வெள்ளாற்றில் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக பாலம் கட்டப்பட்டு புறவழிச்சாலை பணி முடிக்கப்பட்டது.
இப்புறவழிச்சாலை வழியாக செல்வதால் 10 கி.மீ., தூர பயணம் குறைகிறது. பணி முழுவதும் முடிக்கப்பட்டு இன்னும் முறையாக திறப்பு விழா காணப்படாத இச்சாலை வழியே கடலூரில் இருந்து சிதம்பரம், சிதம்பரத்தில் இருந்து கடலூர் மார்க்கமாக செல்லும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பஸ்கள் புவனகிரியை தவிர்த்து சென்று விடுகின்றன. புவனகிரி வழியாக பஸ்கள் வராததால் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின் றனர். கடலூர் மற்றும் சிதம்பரம் பஸ் நிலையங்களில் பஸ் புறப்படும் முன்பே புறவழிச்சாலை வழியாக செல்கிறது எனக் கூறி புவனகிரி பயணிகளை ஏற்றுவதை தவிர்க்கின்றனர். பகல் நேரங்களில் சில பஸ்கள் மட்டுமே சென்று வரும் நிலையில் இரவு நேரங்களில் செல்லாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் கடந்த மாதம் 11ம் தேதி புவனகிரியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆர்.டி.ஓ., தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் புவனகிரி வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் செல்ல நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மோட்டார் வாகன ஆய்வாளர் மூலம் அறிவுறுத்தப்பட்டது. தனியார் பஸ் உரிமையாளர்கள், தொழிற்சங்கத்தினரை அழைத்து புவனகிரி வழியாக செல்ல உத்தரவிடப்பட்டது. பஸ்களிலும் புவனகிரி வழி என எழுதப்பட்டது. ஒரு சில வாகனங்கள் மீது வழக்கும் போடப்பட்டது. இருந்தும் வெள்ளாற்று பாலம் வழியாக பஸ்கள் சென்று கொண்டுதான் இருக்கிறது. புறவழிச்சாலை திறக்கப்படாத நிலையில் பஸ்கள் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பெறமுடியாது. இருப்பினும் இச்சாலை வழியாக டிரைவர்கள் பஸ்களை இயக்குவதும் வேதனையாக உள்ளது. புறவழிச்சாலையை முறையாக திறப்பு விழா நடத்தி தொலைதூர விரைவு பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மட்டும் இவ்வழியாகவும் மற்ற அனைத்து பஸ்களும் புவனகிரி வழியாக செல்லவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Source: dinamalar

No comments:
Post a Comment