சிதம்பரத்தில் வங்கியின் பண எடுப்பு எந்திரத்தில் பணம் எடுக்க உதவுவதாகக் கூறி சுமார் 25,000 ரூபாய்களைத் திருடிக்கொண்டு ஓடிய மர்ம ஆசாமியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதுபற்றிய செய்தி வருமாறு:
சிதம்பரத்தின் வடக்குவீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (52) என்பவர் தெற்குவீதியில் உள்ள கனராவங்கி பண எடுப்பு எந்திரத்தில் (ATM) பணம் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது நாகரிக ஆடை அணிந்த ஒருவர் உள்நுழைந்து பணம் எடுக்கத் தான் உதவுவதாகக் கூறி, 25,000 ரூபாய் எடுத்துள்ளார். பணம் வெளிவந்ததும், அந்த ஆசாமி முழுப்பணத்தையும் எடுத்துக்கொண்டு ராஜேந்திரனைத் தள்ளிவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியோடிய மர்ம ஆசாமி குறித்து ராஜேந்திரன் சிதம்பரம் காவல்துறையில் முறையிட்டதன் பேரில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து அந்த ஆசாமியைத் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment