Islamic Widget

May 31, 2012

சிரிய அதிபர் தலைக்கு $450,000 டாலர்கள் : சவூதி மதகுரு

சிரிய அதிபர் பஷர் அல் அஸ்ஸாதை கொல்பவருக்கு சுமார் 450,000 அமெரிக்க டாலர்கள் பரிசளிக்கப் போவதாக சவூதி அரேபிய மதகுரு ஒருவர் அறிவித்துள்ளார்.
பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை புரிந்துவரும் பஷர் அல் அஸ்ஸாத் புரியும் அட்டூழியங்களை இனியும் பொறுத்துக்கொள்ள இயலாது என்று கூறியுள்ள இஸ்லாமிய அறிஞர் அலீ அல் ரபீய்யி, பஷர் அல் அஸ்ஸாத்தை கொல்பவருக்கு, சுமார் 450,000 டாலர்கள் பரிசளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த சனியன்று சிரியாவில் படுகொலை செய்யப்பட்டு மசூதி ஒன்றில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் சடலங்கள் கிடத்தப்பட்டிருந்த ஒளிப்படக் காட்சி உலகையே திடுக்கிட வைத்துள்ளது என்று தனது ட்விட்டர் செய்தியில் அலீ அல் ரபீய்யி தெரிவித்துள்ளார்.

சிரியாவின் அல்ஹவ்லா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 108 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் 32 குழந்தைகள் பத்து வயதிற்கும்  குறைவானவர்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் இப்படுகொலைகளில் தமக்குப் பங்கில்லை என்று சிரியாவின் இராணுவம் மறுத்துள்ளது

No comments:

Post a Comment