Islamic Widget

May 31, 2012

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு - நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து முறையீடு

மத்திய அரசுப் பணிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மத்திய அரசு ஆணையினை ஆந்திர உயர் நீதிமன்றம் 28.05.2012 அன்று ரத்து செய்தது.


”இந்த ரத்தினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை செய்யப்போவதாக” மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார். ”சிறப்பு மனுவினை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம் எனத் தெரிவித்த குர்ஷித், அட்டர்னி ஜெனரலுடன் விவாதித்து,விரைவில் இதனை செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.
”அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என ஆந்திரா நீதிமன்றம் தெரிவித்தது சரியானது” எனத்தெரிவித்த சல்மான் குர்ஷித், ”முஸ்லிம்களுக்கு மதரீதியாக ஒதுக்கீடு வழங்காமல் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கான இடஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு கோருகிறோம்” எனத் தெளிவுபடுத்தினார். சிறப்பு சலுகை பெறும் அளவிற்கு முஸ்லிம்கள் பின் தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்கப்படாததாலும், மதச்சிறுபான்மையினர் அனைவரும் ஒரே இனக்குழுவினைச் சார்ந்தவர்கள் என்ற அடிப்படையிலும் ஆந்திர நீதிமன்றம் இதனை ரத்து செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment