மத நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதாகத் தெரிவித்துள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் இரண்டாவது நாள் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள வந்த பொதுமக்கள் மீது போலீசார் இன்று தடியடி நடத்தினர்.
உண்ணா விரதம் இரண்டாவது நாளை எட்டியுள்ள நிலையில் விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. கூட்டம் அதிகரிக்கவே கூட்டத்தை கட்டுப் படுத்தத் திணறிய குஜராத் காவல்துறையினர் பொதுமக்கள் மீது தடியடி நடத்திக் கூட்டத்தை கலைத்தனர். போலீசார் நடத்திய தடியடியில் பொதுமக்கள் பலர் காயமடைததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment